Hon'ble Mr. Justice Krishnan Ramasamy
- A Compassionate Judge
My heartfelt salutations to the judge who felt the pain of a little girl suffering from pity and grief as his own pain
கருணை, கரிசணை, பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் வலியை தன் வலி போல் உணர்ந்த அந்த நீதிபதியின் உணர்வுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கங்கள். மூன்று வயதுக்குழந்தை தன் தாயுடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குள் சென்று கடவுளை வணங்கிவிட்டு வெளியே வரும்போது சற்றே பிளிறுண்ட யானையைப் பார்த்த மக்கள் கூட்டம் அங்கும் இங்கும் சிதறிய நேரத்தில், தாயின் கையில் இருந்த அந்த சிறுமியின் தொண்டைப் பகுதியை தும்பிக்கையால் யானை தாக்கியது என்பதுதான் மனுதாhரின் வழக்கு. அச்சிறுமியின் குரல்வலை முழுவதுமாக சிதைந்ததை தொடர்ந்து அச்சிறுமி இப்போதுவரை மூச்சுக்காற்றை செயற்கை உபகரணம் வழியே சுவாசிக்கிறார், பேசும் ஆற்றலை இழந்தார் மற்றும் உணவைக் கூழாக்கி உண்கிறார். நினைத்துப்பார்த்தாலே நமக்கு தலைச்சுற்றும் ஆனால் அச்சிறுமி தன் இன்னல்களை சுமந்துகொண்டு, கணினி துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றுள்ளார். இச்சம்பவத்திற்கு பிறகு தொடர்ந்து இருபது ஆண்டுகளாக மனுக்கள் கொடுக்கப்பட்டிருப்பினும், வழக்கு தொடரவே இல்லை. இப்படி ஒரு துன்பத்தில் சிக்கிக்கொண்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்த அப்பெண் ஒவ்வொரு வருடமும் செயற்கை சுவாசக்கருவியை விலைக்கு வாங்கி மாற்றிக்கொண்டு வாழ்க்கை சக்கரத்தை நகர்த்தி வருகிறார். நன்றாக பேசிய குழந்தை பேசமுடியாத நிலைக்கு சென்றதால் பெற்றோர் நொறுங்கிப்போனார்கள். சில மாதங்களுக்கு முன்பு வழக்கறிஞர் திரு. ராகுல் அவர்கள் என்னை அழைத்து பாதிக்ப்ப்ட்ட சிறுமிக்கு உதவ வேண்டும் மற்றும் அதற்கான நீதிப்பேராணை வழக்கினை தயார் செய்யுமாறுக் கூறினார். மருத்துவம் தொடர்பான ஆவணங்களையும் மற்ற முன் தீர்ப்புகளையும் குறிப்பிட்டு வழக்கை தயாரித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்காக நான் பதிவு செய்தேன். வழக்கின் முதல் விசாரணை நாளன்றுதான் மான்புமிகு நீதிபதி திரு. கிருஷ்ணன் ராமசாமி அவர்களின் வார்த்தைகள் பாதிக்கப்பட்ட நபருக்காக பேசியது. கோவிலுக்குள் நடந்த சம்பவத்திற்கு கோவில் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டு;ம் என்றார். ஏதேனும் ஒரு வேலையை பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்க வேண்டும் என்று குறிப்பி;ட்டு வழக்கை ஒத்தி வைத்தார். அரசு தரப்பில் தாமதமாக வழக்கு தொடர்ந்தது பற்றியும், சம்பவம் யாணையால் அல்ல என்றும், கூட்ட நெரிசலே காரணம் என்றும் கூறப்பட்டது. ஆரம்பத்தில் நான் வழக்கை வாதிட்டேன். அதன்பிறகு திரு. ராகுல் அவர்க்ள் பல தீர்ப்புகளை முன்வைத்து வழக்கினை வாதிட்டார். வழக்கின் விசயத்திற்குள் நான் அதிகமாக செல்ல விரும்பவில்லை. வழக்கின் முடிவில் பாதிக்கப்பட்டவருக்கு வேலையும், இருப்பததைந்து இலட்சம் ரூபாயும் தர வேண்டும் என்று உத்தரவு 11.01.2021 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இவ்வழக்கில் பயணிக்க எனக்கு வாய்ப்பளித்த திரு. ராகுல் அவர்களுக்கு நன்றிகள் !
எல்லாவற்றிற்கும் மேலாக மான்புமிகு நீதிபதி திரு. கிருஷ்ணன் ராமசாமி அவர்களின் குரல் பாதிக்கப்பட்டவருக்;காக உயர்நீதிமன்றத்தில் இருந்து ஒலித்ததுதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அச்சிறுமியின் வலியை, வேதனையை உணர்ந்த நீதிபதியின் தீர்ப்பு மதுரை உயர்நீதிமன்ற வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பிடிக்கும். சட்டத்தை மையப்படுத்தி எழுதிய தீர்ப்பாக இருந்தாலும் என்னை பொறுத்தவரை குரல்வளை சிதைந்த ஒரு மனித உயிருக்கு குரலாய் வந்து தீர்ப்பு எழுதிய மான்புமிகு நீதிபதி திரு. கிருஷ்ணன் ராமசாமி அவர்களின் உயர்வான கனிவான குணம் எனக்கு பெருமகிழ்ச்சியை உருவாக்கியது. ஏனென்றால் அவரிடம் நான் வழக்கு விசாராணை போது பார்த்த யதார்த்தம், பாதிக்கப்பட்ட சக மனித உயிருக்காக தன் அதிகாரத்தை பயன்படுத்திய விதம் எல்லாமேதான் நீதித்துறையின் ஓர் அன்பியல் !
https://www.barandbench.com/news/litigation/compassionate-appointment-madras-high-court-aids-woman-injured-by-temple-elephant
The 23-year-old woman had suffered grievous injuries, affecting her life prospects, following an attack in 1999 by an elephant during a visit to a temple maintained by the State.
"Life" under Article 21 of the Constitution of India (right to life and personal liberty) does not mean a mere survival or living in immobile, animal existence, the High Court reiterated.
"It is the basic expectation of every human being to live a healthy and active life. If such expectation is breached due to the negligence of the State or its agencies, then it becomes an obligation of the State to do the needful for restitution of the person who has suffered due to the negligence of his servants. This is the reason why this Court exercises its equitable/inherent jurisdiction conferred under Article 226 of The Constitution of Indian in appropriate cases by granting compensation and thereby come to the rescue of persons whose right to life has been impaired or affected due to the negligence of the State or its instrumentalities," Justice Krishnan Ramaswamy observed.
On an examination of the case, the Court even opined that it was a fit case where the court would be justified in awarding monetary compensation of over Rs 1 crore rupees, along with compassionate employment, even if the petitioner had only sought compassionate employment.
"If at all, this Court intends to render complete and comprehensive justice to the petitioner, it can be done only by providing monetary compensation as well as compassionate appointment. Any decision by this Court for providing compassionate appointment alone to the petitioner, will amount to rendering piecemeal justice. Certainly, such way of rendering justice, would not provide complete justice. Therefore, to avoid rendering justice in a piecemeal manner, in deserving cases, this Court can invoke Article 226 of the Constitution of India, to mould the relief to do complete and comprehensive justice," the Court said.
The petitioner before the Court had during suffered permanent injuries to her throat after a belligerent temple elephant attacked her during a visit to the Arulmigu Maariamman Temple when she was three years old.
The woman had approached the Court seeking compassionate employment, on the ground that the State was vicariously liable for the negligence of the mahout owing to which the temple elephant had injured her.
The Court was told that the family was under severe financial stress and had faced enormous difficulties in meeting the medical needs of the petitioner for the past 20 years. Various representations made to the State for aid had yielded no positive response, it was submitted.
The Court was further informed that owing to “Laryngol Pharyngeal Traumatic Injury”, as diagnosed by doctors, she required an artificial tracheal tube inserted in her throat to breathe, that she could not take solid food and that she lost her speech.
The State opposed the plea for compassionate employment, but submitted that it was willing to reimburse the petitioner for medical expenses incurred to the tune of Rs 3.93 lakh on humanitarian grounds.
The State also disputed the petitioner's stance that she had suffered her injuries on account of the elephant. Rather, the State submitted that the petitioner had been injured after she fell in a garbage carrier amid public chaos that followed after the elephant's behaviour was misinterpreted by the temple crowd.
Justice
Krishnaswamy, however, rejected the State's version upon finding that
there was enough material, including newspaper reports of the 1999
incident, to attribute the petitioner's injuries to the elephant attack.
"The reason for the incident of elephant attack was due to
the sheer negligence on the part of the Mahout of the fourth respondent
temple," the Court concluded.
As such, the Court opined that the petitioner's fundamental rights had been violated owing to the negligence of the State authorities.
Further, the Judge observed that given the incurable nature of her injuries, the poor financial background of the petitioner's family and her scattered marital prospects, the petitioner has to manage on her own.
The Court, therefore, proceeded to direct the State authorities to appoint the petitioner, a computer science graduate, to a suitable post in the Hindu Religious and Charitable Endowments Department, Trichy within four weeks' time, in additional to the payment of Rs 25 lakhs as compensation.
"Taking into consideration of the loss of marital prospects, sufferings that she has been undergoing from day-to-day life, the poor financial status of her father, and unpredictability of the problem that she is going to face in the future with the existing disabilities, this Court is of the view that it would be appropriate to employ her on compassionate ground in the Hindu Religious and Charitable Endowments Department, as the same would help the petitioner to improve her financial status, marital prospects, living style, mental strength and reduce her mental agony and other sufferings to some extent," the Court said.
The Judge also added a note of caution over safely housing elephants in temples. In this regard, the Court observed that the State should be very cautious when the devotees are visiting the temple with the elephant being there.
"Several temples maintained by the State are keeping elephants within their premises as part of tradition and religious practices. This practice of having elephants in temples is seen from historic times... The State (fourth respondent temple) is the owner and maintaining the endangering wild animal in a place where a large number of public will assemble and therefore the State has to maintain the animal in such a way that it would not cause or create any fear among the public and in any case, if any injury sustained due to the indifferent behaviour or fear of the elephant, to any public or devotees, the State cannot absolve or wriggle out of its liabilities merely by stating that there was no elephant attack," the Court made it clear.
Comments
Post a Comment