நியூயார்க்கின் மிட் டவுன் சமூக நீதி மைய நீதிமன்றத்தில் எனது அனுபவம்:
நியூயார்க்கின் மிட் டவுன் சமூக நீதி மைய நீதிமன்றத்தில் எனது அனுபவம்:
My Experience at the Midtown Community Justice Center Court Hall, New York:
-- R. Karunanidhi, Advocate, Madurai Bench of Madras High Court
சமுதாயத்தில் குற்றம் செய்த நபர்களுக்கு வழக்கமாக நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வழங்காமல், சாதரண குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு அவர்களை திருத்தும் வகையில் சமுதாயத்தில் மற்றவர்களுடன் சேர்ந்து மீண்டும் நல்ல முறையில் வாழ்வதற்கு ஒரு புதுவித அனுகுமுறையை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாநில நீதித்துறை செய்து வருவதை கணடு வியந்தேன்.
1991-ல் நீயூயார்க் நகர சிறையில் இருபதாயிரத்திற்கும் மேற்ப்பட்ட குற்றவாளிகள் இருந்தார்கள். தற்போது 6000 குற்றவாளிகள் மட்டுமே நீயூயார்க் நகர சிறையில் இருக்கிறார்கள். இந்த நீதிமன்றம் ஆரம்பிக்கபட்ட பின்பு சிறு சிறு குற்றங்களை செய்த எல்லா நபர்களையும் சிறையில் அடைக்காமல், அவர்கள் திருந்தி வாழ்வதற்காக ஒரு வழிமுறையை இந்த நீதிமன்றம் உருவாக்கி உள்ளது. இதனால் அவர்கள் ஒரு Habitual Offender ஆக மாற வாய்ப்பு இல்லை.
நான் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நியூயார்க் நகரில் உள்ள இந்த நீதிமன்றத்திற்கு சென்றேன். ஒரு 20 வயது மதிக்க தக்க ஒரு இளைஞரை அழைத்து, நீதிமன்றத்தின் மூலம் 6 மாத கால பயிற்சி எடுத்தபின் அந்த இளைஞனுக்கு ஒரு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்து அவனுடைய கல்வி படிப்பை தொடருவதற்கு ஊக்கம் அளித்து அனுப்பி வைத்தார். நீதிபதி John Wang தனது நீதிபதி இருக்கையில் இருந்து அறிவுரை கூறி ஒரு இளைஞனுக்கு நல்வழி காட்டினாா. இதைக் கண்டு வியந்தேன்.
பொதுவாக 2 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை குற்றங்களை செய்த நபர்களுக்கு இந்த நீதிமன்றம் ஒரு மாற்று முறையில் நீதி பரிபாலணம் செய்கிறது. Prostitute, Drug usage, illegal vending> House trespass போன்ற சிறுசிறு குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் தன் குற்றத்தை ஏற்றுக்கொண்டு இந்த நீதிமன்றத்திற்கு வந்தால் சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் ஏதும் விதிக்காமல் அவர்களை சீர்திருத்தும் பணியில் இந்நீதிமன்றம் செயல்படுகிறது. சுமார் 6 மாதங்கள் வரை அந்த குற்றசெய்த நபரை படம் வரைதல், குழந்தைகளுக்கு பாடம் எடுப்பது, நூலகம் சென்று படிப்பது, அவர்கள் செய்த குற்றத்தையும் அதன் பின் உள்ள நோக்கத்தையும் புரிந்து கொள்ள வைப்பது, கலை நுணுக்கங்களை கற்றுத் தருதல், உணவு தயாரிப்பு கூடத்தில் உதவி செய்ய வைப்பது, தெருக்களை சுத்தம் செய்ய வைப்பது மற்றும் அவர்கள் எதிர்காலத்தில் கல்வி போன்றவற்றில் சிறந்து விளங்கவும் தேவையான நபர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் இந்நீதிமன்றம் உதவிசெய்கிறது.
இந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதி மிகவும் நட்புறவுடனும் மற்றும் பொருமையுடன் ஒரு குழந்தை தவறு செய்தால் எவ்வாறு கண்டிப்போமோ அதே போல் இந்நீதிமன்ற நீதிபதி தண்டனை வழங்க கூடிய கோணத்தில் இல்லாமல் சிறிய குற்றம் செய்த நபருக்கு ஒரு வாய்ப்பை வழங்கி அவரை நல்வழிபடுத்த முயற்சிசெய்கிறார்.
நமது ஊரில் சிறு குற்றங்களை செய்த நபர்கள் தண்டனையை ஏற்றுக்கொண்டு அபராதம் செலுத்தி விட்டால் அல்லது தண்டனை ஏதும் கொடுக்காமல்; மன்னித்து விட்டாலும் கூட அந்த குற்றவாளியின் மீதான குற்ற வழக்கு தண்டனை பெற்ற விபரம் குறித்து எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்த Midtown Community Justice Center - மூலம் வெற்றிகரமாக மூன்று மாத கால அல்லது 6 மாத கால பயிற்சி முடித்தபின்பு, நீதிபதி அந்தக் குற்றவாளி மீதான வழக்கை முழுவதும் ரத்து செய்து விடுகிறார். எதிர்காலத்தில் அரசு வேலை உள்ளிட்ட வேலைகளை பெறுவதற்கு எந்தவித தடையும் இல்லாத வகையில் வழிவகை செய்து தரப்படுகிறது. குற்றம் செய்த நபர் பற்றிய எந்தவிபரமும் காவல்துறை பதிவேட்டில் இருந்தாலும் கூட வேலைவாய்ப்பிற்கு அமெரிக்காவில் தடை இல்லை. எனவே நம் ஊரில் நீதிமன்றத்தில் விடுதலை பெற்றாலும் கூட Honorable Acquittal இல்லை என்றுக் காரணம் கூறி அரசு வேலை தராமல் பல இளைஞர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகும் சூழ்நிலை உள்ளது.
என்னுடைய கட்சிக்காரான 21 வயது இளைஞர் கெட்ட வார்த்தையில் பேசினார் என்ற சிறு குற்றச் செயலுக்காக வெகுநாட்கள் உயர்நீதிமன்றத்தில் போராடியும் அரசுவேலையை பெறமுடியாமல் போனதை நினைத்துப்பார்க்கும் போது, Midtown Community Justice Center -தேவை என்பதை உணர்ந்தேன். சிறு குற்றங்களை செய்த நபர்களை ஆரம்பத்திலேயே திருத்துவதற்கும், படிப்பை தொடர்வதற்கும் மற்றும் வேலை வாய்ப்புகளை பெறுவதற்கும் இது போன்ற நீதிமன்றங்களை இந்தியாவில் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.
Comments
Post a Comment