2003-ஆம் ஆண்டிலிருந்து, எனக்கு நீங்கள் செய்த எண்ணிலடங்கா உதவிகளை, ஊக்கம் அளித்த வார்த்தைகளை இனி யாரிடம் பெறுவேன் என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு ஏற்பட்ட இன்பங்களையும், துன்பங்களையும் சட்டக்கல்லூரி காலம் முதல் உங்களிடம் பகிர்ந்து கொண்ட போது அவ்வளவு பிரியமுடன் கேட்கும் பாட்ஷா சார் இன்று இல்லை எனும் யதார்த்த சூழலை ஏற்றுக்கொள்ள என்னால் முடியவில்லை. மரத்தின் கிளையில் இருக்கும் இலை என்றாவது ஒருநாள் சருகாய் மாறி கீழே விழும் என்ற இயற்கையின் நீதியை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் உங்களின் மரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. புத்தகத்தை எப்போதுமே "புஸ்தகம்" என உச்சரித்து அதன் மேல் எனக்கு ஒரு உயிரோட்டமான உறவை ஏற்படுத்திய "நிஜங்கள்" என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் எங்கே என்று கேட்டுக் கொண்டே என் மனம் நிற்கிறது. கொத்தடிமை உரிமை தொடர்பாக வழக்குகளை கையலும் போதெல்லாம் எத்தனை முறை தொந்தரவு செய்து கேட்டாலும், எனக்கு ஆலோசனை சொல்லும் உங்களை நான் எங்கே போய் தேடுவேன் என்று தெரியவில்லை. என்னை எப்போதுமே எழுதுவதற்கும், மேடையில் பேசுவதற்கும் ஊக்குவிக்கும் அந்த உற்சாக வார்த்தைகள் சத்த...
Comments
Post a Comment